Thursday, March 19, 2015

புதிய வெயிலும் நீலக் கடலும் - என் நாவல்

ஈர்ப்பின் அரசியல் உடைக்கப்படுகிறது. கொலை செய்ய வந்தவன் கொலையாகிப்போகிறான். குற்றமும் தண்டனையும் வேறுபாடு இழக்கின்றன. புதிய வெயில் சுடுகிறது. நீலக் கடல் குளிர்கிறது. மனிதர்கள் வெந்து குளிர்கிறார்கள்....


கிடைக்கும் இடங்கள்....
கிடைக்கும் இடங்கள்:
டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,
கேகே நகர் மேற்கு, சென்னை-78. போன்: 044-65157525, 9940446650.
———
நியு புக்லேண்ட்ஸ்
52 சி, வடக்கு உஸ்மான் சாலை, ஜிஆர்டி ஜுவல்லரி அருகே, தி.நகர், சென்னை -17. போன்: 044-28156006
———-
உடுமலை.காம்
போன்: 7373737742.
———–
டயல் ஃபார் புக்ஸ்: 94459 01234, 94459 79797.
————–

Tuesday, March 10, 2015

சுவை, மணம், நிறம் - என் நாவல்

நடிகை நீலவேணியின் வீடு ஒதுக்குப்புறத்தில் இருந்தது. அவள் மனப்பிறழ்வு அடைந்திருந்தாள். மூத்த நடிகர் கர்னல் கிரிதரன் அவளிடமிருந்து விலகி இரண்டாவது மனைவியுடன் இருந்தார். எப்போதும் ஒரு படத்தை இயக்குவது போலவே நீலவேணி இயங்கிக்கொண்டிருந்தாள். அவளுடைய கற்பனையின் வெளிப்பாடாக கிரிதரனின் மகள் தன்யாவும், தலைமை சமையல் நிபுணன் அமீரும் காதல் காட்சியில் ஈடுபட்டனர். காட்சி உண்மையானது. இருவரும் தங்கள் குடும்பங்களை மறந்தனர்.
கிடைக்கும் இடங்கள்:
உயிர்மை வெளியீடு(2009), விலை ரூ.150,
தொலைபேசி:044-24993448
———
டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,
கேகே நகர் மேற்கு, சென்னை-78. போன்: 044-65157525, 9940446650.
———
நியு புக்லேண்ட்ஸ்
52 சி, வடக்கு உஸ்மான் சாலை, ஜிஆர்டி ஜுவல்லரி அருகே, தி.நகர், சென்னை -17. போன்: 044-28156006
———-
உடுமலை.காம்
போன்: 7373737742.
———–
டயல் ஃபார் புக்ஸ்: 94459 01234, 94459 79797.
————–









































Monday, March 9, 2015

என் பெயர் - என் நாவல்

என் பெயர். என் நாவல்.
பெயர்கள் பிம்பங்கள். மாயைகள். அடையாளங்கள்.
ஒரு பெயர் பிறந்து, ஒரு பெயர் அழியும். ஒரு பெயர் பிறழ்ந்து மறுபெயர் புலரும். பெயர்கள் சுமைகள். பெயர்கள் திரைகள். பெயர்களின் அரசியல் சிக்கல் கொண்டது. துயரம் கொண்டது. அதைச் சொல்வது இந்த நாவல்.
கிடைக்கும் இடங்கள்:
டிஸ்கவரி புக் பேலஸ், கேகே நகர், சென்னை 78. Ph+91 9940446650

இணையத்தில் பெற: http://discoverybookpalace.com/tags.php?tagid=7477
புக்லேண்ட், சி 52, வடக்கு உஸ்மான் சாலை, தி நகர் சென்னை 17.
Ph+91 9840227776.

Wednesday, March 4, 2015

வென்றார் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவாலின் விருப்பப்படி ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழுவிலிருந்து யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் நீக்கப்பட்டார்கள். முதல்வராகவும், கட்சி அமைப்பாளராகவும் அர்விந்த் கெஜ்ரிவால் நீடிக்கிறார். ஜனநாயகம் நிறைந்த கட்சிதான். தனி நபர் சார்பைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய அரசியல் மரபில் தனிமனிதன் சார்ந்த அரசியல் மையம் தானாக உருவாகிவிடுகிறது. தனி சாதனையாளர்களை வணங்கும் மக்களின் மனப்போக்கு இதற்குக் காரணம். தமிழ்நாடு தனி நபர் சார்ந்த அரசியல் கட்சிகள் நிறைந்த மாநிலம். ஆந்திரா போன்றவையும் இப்படித்தான். பாஜக போன்ற ஜனநாயகம் நிறைந்த கட்சியிலும் மோடி என்ற தனி பிம்பம்தான் இப்போது ஆட்சி செலுத்துகிறது. தனி பிம்பங்களின் பிரதிகளாக இருப்பதை மக்கள் விரும்புகிறார்கள். தாங்களே தனி அதிகாரம் பெற்றது போன்ற மாயை தனிமனித மனதிற்குத் தேவையாக இருக்கிறது. அதை தலைவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

Monday, March 2, 2015

ஆம் ஆத்மியின் அதிகாரப் போட்டி

ஆம் ஆத்மி அதிகார ஆத்மி ஆகிவிட்டான். டெல்லியில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஆம் ஆத்மி நிர்வாகிகள் அதிகாரப் போதாமையுடன் மனச் சிக்கல் அடைந்துவிட்டார்கள். அதிகாரம் எங்கு குவிகிறது என்று லென்ஸ் வைத்துத் தேடத் துவங்கிவிட்டார்கள். அதிகாரம் பரவலாக்கப்பட்ட அரசியல் குவியம் உலகில் எங்குமே இல்லை. மனிதனின் அதிகாரக் குவியலைக் குறைக்க முடியாது. பேச்சால், எழுத்தால், நடிப்பால், நிர்வாகத்தால் அதிகாரம் குவிந்துவிடுகிறது. அதை ஓட்டை ஆக்க வேண்டும் என்றால் அமைப்பே ஓட்டை ஆகிவிடும். முன்பு ஜனதா கட்சி தலைவர்கள் ஜனநாயகத் தாகத்தில் தங்களைத் தாங்களே அதிகார ஓட்டையாளர்களாக ஆக்கிக்கொண்டது போல் ஆம் ஆத்மித் தலைவர்களும் ஆகக்கூடும். ஆனால் இவர்கள் அதிகாரப் போட்டி போட்டு, ஆட்சிக்கு வேட்டு வைத்துவிடுவார்கள் என்று உணர்ந்துதான் டெல்லி மக்கள் ஒரேயடியாக இடங்களை அள்ளிக் கொடுத்துவிட்டார்கள். சண்டைபோட்டு இரண்டு கட்சியானாலும் ஆட்சி நீடிக்கும். அர்விந்த் கெஜ்ரிவால் எனும் அதிகார மையத்தை அவ்வளவு சீக்கிரம் அசைத்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.